குழந்தைகளுக்கான ஒழுக்கப் பயிற்சி
குழந்தைகளின் உண்மையான ஒழுக்கப் பயிற்சி என்பது, நேரத்தை நிர்ணயித்து குழந்தைகளை ஓரிடத்தில் ஒன்று சேர்த்து மார்க்க விளக்கங்களை அளிப்பதல்ல.
குழந்தைகளின் ஒழுக்கப் பயிற்சி என்பது, தற்காலிக அறிவுரைகளால் வந்துவிடுவதில்லை. மாறாக, வீட்டுச்சூழலே இதற்கான பிறப்பிடமாக இருக்கிறது.
உங்கள் வீடுகளில் நற்பண்பு, மனிதம் ஆகியவற்றுக்கான சூழல் இருந்தால்...
உங்கள் வீடுகளில் புறம் பேசுவதற்கும் பிறரைக் குறை கூறுவதற்கும் இடமில்லை என்றிருந்தால்...
உங்கள் வீடுகளில் அறிமுகமானோர், அந்நியர் ஆகிய அனைவரையும் கண்ணியப்படுத்தும் சூழல் இருக்குமானால்...
இந்தச் சூழல் உங்கள் வீட்டை ஓர் உயிருள்ள பயிற்சிக் கூடமாக மாற்றிவிடும்.
அதற்குப் பின் சடங்குக்கான அறிவுரைகளின் எந்தத் தேவையும் இருக்காது!
●●
-மவ்லானா வஹீதுத்தீன் கான்
அர்ரிஸாலா (உருது மாத இதழ்)
அக்டோபர் 2001
தமிழில்: ஃபைஸ் காதிரி