Oct 21 2022
அண்மைச் செய்திகள்
கழுத்தை அசைத்தல்
- உங்கள் தாடை மார்பை தொடும் விதமாக தலையை கீழே சாய்க்கவும்.
- 5வினாடிகளுக்கு இதே நிலையில் வைத்திருக்கவும் பின்பு சகஜ நிலைக்கு வரவும்.
- 5 முறை மீண்டும் செய்யவும்.
பக்கவாட்டில் கழுத்தை அசைத்தல்
- தோள்பட்டையில் காது படும்படி பக்கவாட்டில் தலையை சாய்க்கவும்.
- 5 வினாடிகளுக்கு இதே நிலையில் வைத்திருக்கவும்.
- மீண்டும் நேராக பார்த்து மறுபக்கம் மீண்டும் சாய்க்கவும்.
- ஒவ்வொரு பக்கமும் 5 முறை மீண்டும் செய்யவும்.
கழுத்தை திருப்புதல்
- தாடையை அதே உயரத்தில் வைத்து வசதியாக திரும்ப முடிந்த வரை தலையை ஒருபுறமாக திருப்பவும்.
- 5 வினாடிகளுக்கு இதே நிலையில் வைத்திருக்கவும்.
- மீண்டும் நேராக பார்த்து மறுபக்கம் மீண்டும் திருப்பவும்.
- ஒவ்வொரு பக்கமும் 5 முறை மீண்டும் செய்யவும்.
கழுத்தை ஸ்ட்ரெட்ச் செய்தல்
- உடம்பை நேராக வைத்து தாடையை முன் இழுக்கவும், இவ்வாறு செய்வதால் உங்கள் தொண்டை ஸ்ட்ரெட்ச் செய்யப்படும்.
- 5 வினாடிகளுக்கு இதே நிலையில் வைத்திருக்கவும்.
- தலையை மீண்டும் சம நிலைக்கு கொண்டு வந்து தாடை மேலே இருக்கும்படி பின்னோக்கி சாய்க்கவும்.
- 5 வினாடிகளுக்கு இதே நிலையில் வைத்திருக்கவும்.
- 5 முறை மீண்டும் செய்யவும்.
உபயம்:
நூன் பிசியோ சென்டெர்- தேரழந்தூர்.