மதுரையில் கடந்த செப்டம்பர் 22 முதல் 26 வரை நடைபெற்ற அகிம்சை சந்தை பற்றிய கட்டுரை இது.
மதுரை தமுக்கம் அருகில் அமைந்த்துள்ளது ‘காந்தி அருங்காட்சியகம்’. இந்த அருங்காட்சியகமானது ஒரு சுற்றுலா தளமாக மட்டும் இல்லாமல் பல்வேறு சமூக நிகழ்வுகளின் அடித்தளமாக அமைந்துள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் காந்தியம் மற்றும் அகிம்சை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள் வார இறுதி நாட்களில் நடைபெறுவது வழமை. இயற்க்கை முறையில் சோப்பு தயாரித்தல், ஷாம்பு தயாரித்தல், சிறுதானிய உணவு பொருட்கள் தயாரித்தல், கைவினைப் பொருட்கள் தயாரித்தல் என சுய சார்பு வாழ்விற்கான மேம்பாட்டு திறன் பயிற்சிகள் துறை சார்ந்த வல்லுநர்களால் நடத்தப்படும்.
இவ்வகுப்புகளில் பங்கெடுத்த ஏராளமான பெண்கள் தமது வாழ்வில் இந்தப் பயிற்சிகளை செயல்படுத்தி தொழில் முனைவோராக மாறி வருகின்றனர். அந்த தொழில் முனைவோர்களின் சங்கமமாக அப்பெண்கள் தமது பொருட்களை சந்தைப்படுத்தும் விதமாக மக்கள் மத்தியில் அதை பயன்பாட்டுப் பொருளாக பரவலாக்க கடந்த செப்டம்பர் 22 முதல் 26 வரை ‘அகிம்சை சந்தை’ என்னும் பெயரில் இந்த காந்தியச் சந்தை மிக சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது.
இச்சந்தையின் சிறப்பம்சம் என்னவெனில் மண்ணுக்கு கேடு விளைவிக்கக்கூடிய நெகிழி சார்ந்த பொருட்கள் தடைசெய்யப்பட்ட நெகிளியில்லா சந்தையாக நடத்தப்பட்டது.
இதில் பங்கெடுத்த பெண் தொழில் முனைவோர்கள் மிகுந்த உற்சாகத்தோடும், மகிழ்வோடும் பங்கேற்று சிறப்பாக பணியாற்றி தமது பொருட்களை நல்ல முறையில் சந்தைப்படுத்தி லாபத்தையும் அடைந்தனர். வாடிக்கையாளர்களையும் அடைந்தனர்.
‘அகிம்சை சந்தை, அழகான சந்தை’