மனமுடித்து மகிழ்ச்சியாக மனைவியோடு வாழவேண்டிய பருவத்தில் சூழ்நிலை காரணமாக காணல் நீரைப் போல் இருக்கும் இந்த வெளிநாட்டு வாழ்கையை எட்டி பிடிக்க விமானம் ஏறி வாலிபத்தை வளைகுடாவில் தொலைத்தவர்கள் நாங்கள்.
உன் முகம் பார்த்து என் விழிகள் மூடி ..காலை உன் குரல் கேட்டு எழுந்து உன்னை கட்டி தழுவி முத்தமிடும் நேரம் ஒலித்தது கைபேசியில் அலார்ம்...கனவுகளை கண்ணீருடன் கரைத்து விட்டு..
கிளம்பினேன் வேலைக்கு. வேலை முடிந்து நான் வரும் நேரம் வாசலின் ஓரம் .. எனக்காக காத்திருக்க என் மனைவியும் இல்லை என் மக்களும் இல்லை.
என் மழலயை கொஞ்சி விலையாடி முத்தமிட ஆசைகள் எனக்கும் நிரையவே உன்டு... நீ தவழ்ந்து வர நான் பறந்து சென்றேன். பிடித்து கொல்ல என் விரல்கள் இன்றி நீ எழுந்து கால் ஊன்றி விட்டாய்.
குறிஞ்சி பூவிற்கும் கள்ளி பூவிற்கும் இடைப் பட்ட தூரம் தான் எங்களின் நெருக்கம் வருடம் முழுவதும் தினம் தினம் விடுமுறைகான நாட்களை எதிர்பார்த்து அன்றைய பொழுதை கழித்து வீடு திரும்ப ஒரே நாளில் பூத்து வாடிய கள்ளி பூவை போல் நாட்களும் நகர்ந்து முடிந்தது.
இதோ வந்துவிடுவேன் என சொல்லி திரும்பி பார்த்தேன் இருபது வருடம் போயிருச்சு, இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கொள் சீக்கிரமாகவே வந்துவிடுகிறேன் என வராமலயே மண்ணுக்குல்ல மறைந்து போனவங்க நிரையப் பேரு
காலத்தின் கட்டாயத்தால் உறவுகளை பிரிந்து வாடும் எங்களை விட நீங்கள் பாக்கியசாலிகளே...