அப்துல் கபூர் என்கிற நபர் டெலிவரி பாயாக துபாயில் வேலை செய்து வருகிறார். டிராபிக் சிங்னலில் காத்திருக்கும் நேரத்தில் சாலையில் வாகனங்களுக்கு இடையூறாக கான்கிரீட் பிலாக் இருப்பதை கண்டு வாகன ஓட்டிகளின் ஆபத்தை உனர்ந்து அதை அகற்றி பாதுகாப்பாக சாலை ஓரத்தில் வைத்தார். இதனை காரில் அமராந்திருந்த ஒரு நபர் வீடியோ எடுத்து அது சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகியது. இந்த நெகிழ்வான செயல் துபாயின் பட்டத்து இளவரசரான Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum அவர்களின் பார்வைக்கு வர தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "An act of goodness in Dubai to be praised. Can someone point me to this man?” என பதிவிட்டிருந்தார் அதை தொடர்ந்து சிறிது நேரத்தில் "good man” had been found. “Thank you, Abdul Ghafoor, you are one of a kind. We will meet soon!” என பதிவிட்டார்.
அது மட்டுமில்லாமல் அப்துல் கபூரை துபாயின் பட்டத்து இளவரசர் Sheikh Hamdan தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பாராட்டை தெரிவித்துள்ளார் அதுமட்டுமின்றி தான் இப்பொழுது வெளிநாட்டில் இருப்பதாகவும் துபாய் திரும்பியபின் நேரில் சந்திப்பதாக கூறினார்.
அவ்வாறு கூறியது மட்டுமில்லாமல் துபாய்க்கு வந்த பிறகு அப்துல் கபூரை நேரிலும் சந்தித்தார்.